Tuesday, 1 March 2016

தமிழக அரசின் ” இல்லந்தோறும் குறைந்த கட்டணத்தில் "இன்டர்நெட் “சேவை முதல்வர் ஜெ தொடங்கி வைத்தார் ! : டாரிப் பட்டியல் வெளியீடு!


சென்னை : அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் இணைய இணைப்புகள் வழங்கவுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். இதன் மூலம் ,தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்பட்டு ,பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை பெற்று பயன்பெற முடியும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் , தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தைச் சேர்ந்த "அரசு ஃபைபர் "(இல்லந்தோறும் இணையம் ) தனது டாரிப் பட்டியல் விவரங்களை அறிவித்துள்ளது.இந்த டாரிப் பட்டியல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 6 பிளான்களை வழங்குகிறது.
அதன்படி குறைந்தபட்சம் ,மாதம் கட்டணமாக 299 ரூபாய் செலுத்தி, 2 ஜிபி டேட்டாவை 2 எம்பிபிஎஸ் வேகத்தில் பெறலாம் என்றும் அதிகபட்சமாக மாதம் 899 ரூபாய் செலுத்தி, 40 ஜிபி டேட்டாவை 4 எம்பிபிஎஸ் வேகத்தில் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் , மாதத்திற்கு பதிவிறக்கும் அளவுக்கு மேல் உபயோகித்தால் கூடுதலாக , 5 ஜிபி க்கு 99 ரூபாயும், 10 ஜிபிக்கு 149 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (அரசு ஃபைபர் )தெரிவித்துள்ளது.
மேலும் பிற சந்தேகங்களுக்கு "1800 425 2911" என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment