நேற்று சவூதி அரேபியா ரியாத் ஓலையா சாலையில் இருக்கும் டர்கி உணவகத்தில் சாப்பிடம் போகும்போது என் கண்ணில் பட்டது.
காசு இல்லாமல் பசித்தோருக்கு உணவு இங்ஙனம் இலவசமாக வழங்கப்படும், அதற்க்கு இங்குஇருக்கும் பெல்லை அமுக்கினால் போதும் நேரடியாக உணவு எடுத்து வந்து கொடுப்பார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

கடந்த 2013 ஆம் ஆண்டு துபாயில் இதே போல் பார்த்தேன், இப்போது ரியாத்தில் பார்த்ததும் மகிழ்ச்சி
விருந்தினரை உபசரிப்பது இஸ்லாத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு வணக்கமாகும். விருந்தோம்பல் ஈமானின் ஒரு அங்கம் என்று இஸ்லாம் கூறுகிறது.
“யார்” அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
மகத்தான இறைவனின் வேதம் கூறும் வசனம் :
அவர்கள் தங்களை விட பிறருக்கே முன்னுரிமை அளிப்பார்கள். தமக்கு தேவை இருப்பினும் சரியே! (அல்குர்ஆன் 59:9)
அல்ஹம்துலில்லாஹ் என்ன ஒரு மகத்தனா செயல் .


No comments:
Post a Comment