விடுதலை அரசியல்!
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு.
(சில நாட்களாக அதிமுகவின் பல அறிவிப்புகள் பார்க்கும் போது, அவர்களின் தோல்வி பயம் நன்றாக தெரிகிறது)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.
7 பேரும் ஏற்கனவே 24 வருடம் சிறையில் கழித்துள்ளனர்.
ராஜீவ்காந்தி கொலை நடந்த போது இறந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? அவர்கள் குடும்பம் மற்றும் குழந்தைகள் நிலை உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா??
_______________________________________
_______________________________________
கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முனைப்பு காட்டும் தமிழக அரசு மற்றும் சில தமிழக கட்சிகளுக்கு "இஸ்லாமிய சகோதர்கள் சிலர் #விசாரணை_கைதிகளாக 10 முதல் 20 ஆண்டுகள் உள்ளவர்களை விடுதலை செய்ய முனைப்பு காட்டாதது ஏன்?
இஸ்லாமியர்கள் ஓட்டும் பணமும் தேவை படுகிறது, ஆனால் அவர்களுக்கு கருணைக்காட்ட மனம் இல்லை.
நீங்கள் எல்லாம் நல்லா வருவீங்கடா...
No comments:
Post a Comment