அங்கன்வாடிகளில் மூன்று முதல், ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சத்துணவு மற்றும் மாவு உருண்டை வழங்கப்படுகிறது. வாரந்தோறும், திங்களன்று தக்காளி சாதம், முட்டை, செவ்வாய் அன்று காய்கறி கலவை சாதம், பாசிப்பயிறு அல்லது கொண்டைக்கடலை, புதனன்று காய்கறி புலாவ், முட்டை, வியாழன் அன்று எலுமிச்சை சாதம், முட்டை மற்றும் வெள்ளிக்கிழமை பருப்பு சாதம் ஆகிய உணவுகள் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பம் கண்டறியப்பட்ட நாள் முதல், குழந்தை பிறந்து ஆறு மாதத்துக்கு பாலூட்டும் காலம் வரை, பத்து நாட்களுக்கு ஒரு முறை, 60 கிராம் எடையுள்ள மாவு பாக்கெட் வழங்கப்படுகிறது.இதில் கோதுமை, முளை கட்டிய தானிய வகைகள், கடலைப்பருப்பு மற்றும் வெல்லம் கலந்து இருக்கும்.
மேலும் கடும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு, கூடுதலாக, 190 கிராம் பாக்கெட்டில், சத்துமாவு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சத்துமாவு பெரும்பாலும் காலாவதியானதாகவே இருந்து வருகிறது. அங்கன்வாடிகளுக்கு வரும்போது இதன் தரத்தை பரிசோதிக்கின்ற அதிகாரிகள் இதனை வேண்டாம் என்று திருப்பி அனுப்பினால் மேலிடத்தில் இருந்து அழைத்து கண்டிப்பாக திருப்பி அனுப்ப கூடாது என்று கூறுகின்றனர். இதன் காரணமாக இவை மோசமான தரத்துடன் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் வழங்கப்படுகிறது. ரேஷன் பொருட்கள் போன்று நாற்றமடித்து காணப்படும் இவற்றை உண்டால் வேறு பிரச்னைகள் ஏற்படும் என்று கருதி இவற்றை கால்நடைகளுக்கு பலரும் உணவாக கொடுக்கின்ற வழக்கம் கிராமப்புறங்களில் இருந்து வருகிறது.
No comments:
Post a Comment