Monday, 1 February 2016

தமிழக அரசின் நிதி நெருக்கடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பொறுப்பு ஏற்க வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்



சென்னை: தமிழக அரசின் நிதி நெருக்கடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் வரிவருவாய் 25,000 கோடி ரூபாய் குறையும் என்று வெளியாக செய்தியை சுட்டிக்காட்டியுள்ளார். அதிமுக அரசு பதவியை விட்டு செல்லும் போது அரசு கஜானாவை காலி செய்துவிட்டு செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றதில் இருந்து தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதும் அவர் நடத்தும் கபட நாடகமும் இதில் இருந்து தெரிவதாக அவர் கூறியுள்ளார். 
அதிமுக அரசு தனது வரிவருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் செயற்கையாக உயர்த்திக்காட்டி மோசடி செய்துள்ளதோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கடளாளி மாநிலம் என்ற தலைக்குனிவில் இருந்து மீட்கப் போவதாக வாய்ப்பந்தல் போட்ட ஜெயலலிதா மேலும் தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் சுமார் நான்கரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளதாக விஜயகாந்த கூறியுள்ளார். அதிகமாக கடன் வாங்குவது அதிமுக அரசின் உரிமை என்று நியாயம்படுத்தும் ஜெயலலிதாவின் இரட்டை வேடம் தற்போது கலைந்துவிட்டது. எனவே தமிழக மக்கள் அவரை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment