Tuesday, 23 February 2016

சவுதியிலிருந்து ஊருக்கு செல்லும்போது விமான நிலையங்களுக்குகுறைந்தது 4 மணிநேரத்திற்கு முன் செல்லவேண்டும்.:

               
    சவுதி வாழ் மக்களுக்கு ஒரு செய்தி
சவுதியிலிருந்து ஊருக்கு செல்லும்போது விமான நிலையங்களுக்குகுறைந்தது 4 மணிநேரத்திற்கு முன் செல்வது நல்லது.
காரணம் இப்போது போகும்போதும் நீங்கள் உங்கள் விரல் அடையாளம் Finger Print கொடுக்கவேண்டியுள்ளது பரிசோதனைக்காக. ஏற்கெனவே நமது பாசத்திற்குரிய சவுதிகள் எவ்வளவு வேகமாக வேலை செய்வார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரியும்.
   குறைந்தது 2 மணிநேரத்திற்கு முன்னதாக போர்டிங், எமிக்ரேஷன் போன்ற கவுண்டர்களின் சேவை நிறுத்தப்படுகிறதாம்.
   இதைவிட முக்கியமான விஷயம்
    எந்த நிறுவனத்தின் ஃபிளைட்டுக்கு டிக்கெட் எடுத்தாலும் டிக்கெட் எடு்க்கும் டிராவல்ஸில் உங்கள் பேக்கேஜ் எத்தனை கிலோ அணுமதி என்பதை சரியாக ஒவ்வொருமுறையும் கேட்டு தெழிவு பெற்றுக்கொள்ளுங்கள்.
   காரணம் திடீரென ஜெட் விமானம் 5 நாட்களுக்கு மட்டும் 30 Kg + 7kg என்று கழிந்த இரண்டு மாதங்களில் 3 முறை மாற்றியது.
   அன்றைய நாட்களில் நமது பல சகோதரர்கள் விஷயம் தெரியாமல் 40+ மற்றும் கையில் 7+ கொண்டுபோய் திருப்பி கொண்டுவர முடியாமல் தர்ம சங்கடத்திற்கு உள்ளானதை பார்த்தபோது மனதுக்கு வருத்தமாகவே இருந்தது…
  இந்த செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment