251 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன் விற்பனை இன்று காலை 6 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
“ரிங்கிங் பெல்ஸ்” நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து “FREEDOM 251″ என்ற பெயரில் குறைந்த விலை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. இன்று காலை 6 மணிக்கு இந்த ஸ்மார்ட் போன் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போனை வாங்க ஓரே நேரத்தில் www.freedom251.com என்ற இணையதள முகவரியில் லட்சக்கணக்கானோர் திரண்டதால், அந்த இணையதளம் முடங்கியது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
தற்போது மீண்டும் அந்த தளம் செயல்படத் துவங்கியது.வாடிக்கையாளர்கள் உடன் முன்பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment