அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி எம்எல்ஏ.,க்கள் 10 பேர் ராஜினாமா: பதவி இழக்கிறார் விஜயகாந்த்
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் உட்பட 10 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை இன்று ராஜினாமா செய்தனர். பதவி விலகல் கடிதத்தை பேரவைத் தலைவர் தனபாலிடம் நேரில் வழங்கினர்.
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் உட்பட 10 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை இன்று ராஜினாமா செய்தனர். பதவி விலகல் கடிதத்தை பேரவைத் தலைவர் தனபாலிடம் நேரில் வழங்கினர்.
தேமுதிக 29 இடங்களில் வெற்றி
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, 29 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர், 2012-ம் ஆண்டில் சட்டப்பேரவையில் பேசும்போது முதலமைச்சருக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் ஏற்பட்ட கருத்து மோதலில் கூட்டணி முடிவுக்கு வந்தது.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்
இந்நிலையில், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ சுந்தரராஜன், திட்டக்குடி எம்.எல்.ஏ-வாக ஆன தமிழழகன், பேராவூரணி அருண்பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், சேந்தமங்கலம் சாந்தி, செங்கம் சுரேஷ்குமார், விருதுநகர் மாஃபா பாண்டியராஜன், திருத்தணி எம்எல்ஏ அருள் சுப்ரமணியன் ஆகியோர் அடுத் தடுத்து முதலமைச்சரை சந்தித்து அதிமுக ஆதரவாளராக மாறினர்.
பேரவை தலைவர் தனபாலிடம் நேரில் வழங்கினர்
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வந்த 8 பேரும், தங்கள் பதவியை இன்று ராஜினாமா செய்தனர். இதே போல், அணைக்கட்டு தொகுதி பாமக எம்எல்ஏ கலையரசு, நிலக்கோட்டை தொகுதி எம்எல்ஏ ராமசாமி ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல் கடிதத்தை பேரவை தலைவர் தனபாலிடம் நேரில் வழங்கினர்.
எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை விஜயகாந்த் இழந்தார்
அவர்கள் பதவி விலகலை பேரவை தலைவர் ஏற்றுக் கொண்டார். தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் 8 பேரின் ராஜினாமாவை தொடர்ந்து, அக்கட்சியின் பலம் பேரவையில் 20 ஆக குறைந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் பதவியை விஜயகாந்த் இழப்பதாக பேரவை தலைவர் அறிவித்துள்ளார். இதே போல், வேறு எந்த சட்டமன்ற கட்சித் தலைவரையும் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்க இயலாது எனவும் பேரவை தலைவர் தனபால் அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment