‘டெரஸ்’ என்பதற்கு பதிலாக ‘டெரரிஸ்ட்’ என மாணவன் எழுதிய எழுத்து பிழையால், காவல்துறையினர் அந்த மாணவனின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
இங்கிலாந்தின் லார்ங்சேர் (Lancashire) என்ற இடத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் 10 வயது மாணவன், தனது ஆங்கில பாடத்தில், நான் மாடி வீட்டில் வசிக்கிறேன் (Terrace house) என்று எழுவதுதற்கு பதிலாக, நான் தீவிரவாத வீட்டில் வசிக்கிறேன் (Terrorist house) என்று எழுதியுள்ளான்.
Terrace என்ற வார்த்தையை Terrorist என்று மாணவன் மாற்றி எழுதியுள்ளதை பார்த்த ஆசிரியர்கள், மாணவனுக்கு தீவிரவாத பின்னணி இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இதுகுறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே, அம்மாணவனின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளை சோதனை செய்துள்ளனர். காவல்துறையினர் மற்றும் ஆசிரியர்களின் மாறுபட்ட அணுகுமுறையால் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர், “இது சாதரண விஷயம் ஆகும். இது சிறிய எழுத்துப்பிழை, இதனை எளிதில் ஆசிரியர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர்கள் இவ்வாறு செய்ததால் தற்போது எனது மகன் எழுதுவதற்கே பயப்படுகிறான்” எனக் கூறியுள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், எங்களிடம் வந்த புகாரின் அடிப்படையில் சோதனையிட்டோமே தவிர, இதில் யாரையும் பாதுகாப்பதன் நோக்கம் கிடையாது என்றும், தற்போது அப்பள்ளியிலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்

No comments:
Post a Comment