இங்கிலாந்தில் உள்ள 1,90,000 முஸ்லீம் பெண்கள் ஆங்கிலம் குறைந்த அளவோ அல்லது தெரியாமலோ உள்ளார்கள் என அரசு புள்ளி விவரங்கள் கூறுகிறது. இவர்களுக்காக ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளும் 20 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான புதிய திட்டம் ஒன்றை டேவிட் கேமரூன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பிபிசியின் ரேடியோ 4 க்கு அளித்த பேட்டியில் டேவிட் கேமரூன் கூறியதாவது:-
முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு கராணங்களுக்காக அதிகாரிகள் முகத்தை பார்க்க அவர்களது புர்காவை நீக்க வேண்டும்.இங்கிலாந்தில் தீவிரவாதத்தை சமாளிக்கும் விதமாக எடுக்கும் புதிய முயற்சிக்கு உதவி செய்ய வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்து உள்ளார். மேலும் முக்கியமான சூழ்நிலைகளில் அதிகாரிகள் முகத்தை அடையாளம் காண பெண்கள் தங்கள் முகத்திரையை அகற்ற வேண்டும். எடுத்துகாட்டாக நீதிமன்றம் மற்றும் குடியேற்ற சோதனைகளின் போது.நமது நாட்டில் மக்கள் அவர்கள் விரும்பும் ஆடையை சுதந்திரமாக அணியலாம். என கூறினார்
No comments:
Post a Comment