பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண வகை செய்யும் அம்மா அழைப்பு மையத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலம் தொடர்பு கொள்ளும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை காணொலிக் காட்சி மூலம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த மையத்தின் மூலம், பொது மக்களிடமிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் விவரம், குறைகள் ஆகியவை கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும்.
அந்த துறையில் எந்த அதிகாரிக்கு அவரது குறைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரமும், அழைத்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். மேலும், அவரது குறை குறித்து சம்பந்தப்பட்ட துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரமும் தெரிவிக்கப்படும்.
நாளொன்றுக்கு 15,000 அழைப்புகளை ஏற்கும் வகையில், 138 அழைப்பு ஏற்பாளர்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment