Thursday, 21 January 2016

சிரியாவில் ரஷ்யா தாக்குதலில் தாக்குதலில் 200 குழந்தைகள் உள்பட 1050 பொதுமக்கள் பலி அதிர்ச்சி தகவல்



பெய்ரூட்
சிரியாவில் உள் நாட்டு பேரில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அதிபர் பஷார் அல் ஆசாத் படைக்கு எதிராக தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்; அதிபர் ஆசாத்துக்கு உதவும் விதமாக  ரஷ்யா போரில் களமிறங்கியது. 
இதையடுத்து வான் வழியாகவும், போர் கப்பல்கள் மூலமாகவும் தங்களது தாக்குதலை நடத்திவருகிறது. அதே வேளையில் ரஷ்யா; ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்வதை விட அதிபருக்கு எதிரான குழுக்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுவரை 6000 தாக்குதலை மேற்கொண்டுள்ளது
இந்நிலையில் ரஷ்யா நடத்திய தாக்குதலில்தான் அதிக மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.கடந்த 4 மாதங்களில் அதாவது கடந்த செப்டம்பர் 30 ந்தேதியில் இருந்து நடத்திய தாக்குதலில் 200 குழந்தைகள் உள்பட 1050 பொதுமக்கள் கொல்ல்பட்டு உள்ளனர்.
ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் 893 ஐ.எஸ். தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் பொதுமக்களோ ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக இறந்த மக்களின் எண்ணிக்கையை விட அதிகம் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment