Thursday, 24 December 2015

கூடங்குளத்தில் மூன்றாவது அணு உலையை ரஷ்யா அமைக்கும் - ரஷ்ய அதிபர் புதின் உறுதி

Thu, Dec 24, 2015, 22:26 [IST] 


மாஸ்கோ: கூடங்குளத்தில் ரஷ்யா மூன்றாவது அணு உலையை அமைக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதியாக கூறியுள்ளார். இந்தியா - ரஷ்யா இடையிலான 16வது வருடாந்திர சந்திப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். பின்னர் இந்திய-ரஷ்யா தொழிலதிபர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: சர்வதேச உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற விரும்புகிறோம். பல துறைகளில் ரஷ்யாவுடன் இந்தியா இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்தார். மேலும் மோடி பேசுகையில், மேக் இன் இந்தியா' திட்டத்தில் ரஷ்யா இணைவதால் இந்தியாவில் பல வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் கட்டமைப்பு துறையில் முதலீடு செய்ய ரஷ்ய தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருநாட்டு உறவுகளும் மேலும் வலுப்பெற இந்தியா விரும்புவதாகவும், ரஷ்யா இந்தியாவின் நீண்ட கால தோழர் எனவும் மோடி தெரிவித்தார் இதையடுத்து பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் செய்தியாளர்களை சந்தித்து கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து கூட்டாக ஹெலிகாப்டர்களை தயாரிப்பில் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். அணுசக்தி துறையில் இருநாடுகள் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவில் இரண்டு இடங்களில் 12 அணு உலைகளை நிறுவ முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புதின் கூறுகையில், கூடங்குளத்தில் மூன்றாவது அணு உலையை ரஷ்யா அமைக்கும். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். மேலும் இந்தியா - ரஷ்யா இடையே ஹெலிகாப்டர், தகவல் ஒளிபரப்பு, ரயில்வே உள்ளிட்ட16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

Read more at: http://tamil.oneindia.com/news/india/pm-modi-president-putin-at-ceo-summit-moscow-243048.html

No comments:

Post a Comment