முதலமைச்சர் #ஜெயலலிதா பொறுப்பில் இருந்த துறைகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கீடு செய்து ஆளுநர் அறிவிப்பு..
மேலும், ஜெயலலிதா முதலமைச்சராக நீடிப்பார் என்றும், அவர் பொறுப்பில் இருந்த காவல்துறை, உள்துறை உள்ளிட்டவைகள் கூடுதலாக ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் நலம் பெற்று திரும்பும் வரை இந்த ஏற்பாடுகள் தொடரும் என்றும், முதலமைச்சரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அமைச்சரவை கூட்டங்களுக்கு இனி ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Jayalalithaa | #OPanneerselvam
No comments:
Post a Comment