Monday, 10 October 2016

குடும்ப வன்முறை - உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.


குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், 'வயதுக்கு வந்த ஆண்கள்' மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற சொல் உள்ளதால், பெண்களும், வயதுக்கு வராதவர்களும் தப்பித்து  வருவதாகவும், எனவே  குடும்ப வன்முறை தொடர்பாக யார் யார் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பதில் இடம் பெற்றுள்ள, 'வயதுக்கு வந்த ஆண்கள்' என்ற வார்த்தை நீக்கப்படுவதாக  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பெண்களை, அவர்களுடைய கணவர் வீட்டில் உள்ள பெண்களும், வயதுக்கு வராதவர்களும் கொடுமைப்படுத்தினால், இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இதுவரை ஆண்கள் தண்டிக்கப்பட்டு வந்த நிலையில் மருமகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்.
பெண்களை குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment