உலகில் இன்று அதிக நபர்கள் உபயோகப்படுத்தும் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது பல புதிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சீனா, இந்தியாவை அடுத்து அதிக நபர்கள் வாழும் நாடு ஃபேஸ்புக் நாடு தான் என்று கூறப்படும் அளவுக்கு அதன் பயனாளர்கள் நாளுக்கு நாள் மில்லியன் கணக்கில் அதிகமாகி வருகின்றனர்.
இதேபோல் அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனமும் அவ்வப்போது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வந்துள்ள ஒரு புதிய வசதிதான் மெசஞ்சர் லைட்.
ஃபேஸ்புக் உபயோகப்படுத்த இண்டர்நெட் தேவை என்றாலும் டெக்ஸ்டாப்பில் அல்லது ஸ்மார்ட்போனில் இதை பயன்படுத்த கண்டிப்பாக ஓரளவுக்கு ஸ்பீடான நெட்வொர்க் தேவை. ஆனால் ஒருசில நிறுவனங்களில் இது கிடைக்காது. மேலும் பழைய மாடல் போன்களில் என்னதான் ஸ்பீடான நெட்வொர்க் சிம்-ஐ போட்டாலும் ஸ்பீடு கிடைக்காது.
வேகமில்லாத இண்டர்நெட்டில் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட். இந்த மெசஞ்சர் லைட் குறித்த விபரங்க்ளை தற்போது பார்ப்போம்
1. எதை எதை ஷேர் பண்ணலாம்
இந்த ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் புகைப்படங்கள், டெக்ஸ்ட் வரிகள் மற்றும் இணையதள லிங்குகளை மட்டுமே ஷேர் செய்ய அனுமதிக்கும். வேறு எதையும் நீங்கள் இதில் ஷேர் செய்ய முடியாது.
2. வாய்ஸ் கால் வசதி இல்லை
ஃபேஸ்புக்கில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வாய்ஸ் கால் வசதி அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில் இந்த ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சேட் மட்டுமே செய்ய முடியும். வீடியோ கால் அல்லது வாய்ஸ் கால் இதில் அனுமதி இல்லை. இதனால்தான் குறைந்த வேக இண்டர்நெட் கனெக்ஷனிலும் இது வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
3. பிசினஸ் மெசஞ்சரும் இல்லை:
கடந்த ஆண்டு ஃபேஸ்புக் பிசினஸ் மெசஞ்சரை அறிமுகம் செய்தது. இந்த வசதி தொழிலதிபர்களுக்கும் பிசினஸ் செய்பவர்களுக்கு மிகுந்த உதவியாக இருந்த நிலையில் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட்-ல் இந்த வசதி நீக்கப்பட்டுள்ளது.
4. ஆண்ட்ராய்டு போனுக்கு மட்டுமே பயன்படும்:
உலகில் உள்ள பெரும்பாலானோர் ஃபேஸ்புக்கை ஆண்ட்ராய்டு ஆப் மூலமே பயன்படுத்தி வருவதாக சமீபத்தில் வெளிவந்த சர்வே ஒன்று தெளிவாக கூறியுள்ளது. எனவே ஃபேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் பயன்பாட்டை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மட்டுமே முதல்கட்டமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. போக போக இனி வேறு மாடல்களிலும் இது அறிமுகப்படுத்தப்படலாம்
5. இந்தியர்கள் பயன்படுத்த முடியுமா?
சரி, இந்தியாவில் தான் ஸ்லோவான இண்டர்நெட் கனெக்ஷன் அதிகம் உள்ள இடம். ஆனால் இந்த ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் வசதியை இப்போதைக்கு இந்தியர்கள் பயன்படுத்த முடியாது. கென்யா, துனிஷியா, மலேசியா, இலங்கை மற்றும் வெனின்சுலா ஆகிய ஐந்து நாடுகளில் மட்டுமே தற்போது ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எப்போது ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த சரியான தகவல் இதுவரை இல்லை எனினும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment