Friday, 14 October 2016

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!


    இலங்கையில் காலநிலையில் இன்று தொடக்கம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை வரட்சியை தோற்றுவித்த காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது இடைப்பருவ பெயர்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நாட்டில் பரவலாக மழைபெய்யக்கூடும் என்றும் திடீரென காற்று வீசி இடி, மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.
இவ்வாறு ஏற்பட்டுள்ள திடீர் மற்றத்தினால் பொதுமக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் பொதுமக்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வீடுகளுக்கு அருகில் இருக்கும் பெரியமரங்களில் உள்ள பட்ட மரக்கொப்புகளை அகற்றுவதன் மூலமும் பாதுகாப்பை உறுதிப்படுத்திகொள்ள முடியும் என்றும் இடிமின்னல் தாக்கத்தின் வெற்று பிரதேசங்களில் நிற்பதை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடும் வரட்சிக்குப் பின்னர் நேற்று பொலநறுவையில் கன மழை பெய்துள்ளது. அதேவேளை இன்று அதிகாலையிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment