Wednesday, 12 October 2016

ஹிஜாப் பெண்களின் முன்னேற்றத்தை தடுத்ததா ?

ஹிஜாப் பெண்களின் முன்னேற்றத்தை தடுத்ததா ?

முகம், கைகளை தவிர உடலின் மற்ற பாகங்களை மறைக்க வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டத்தின்படி ஆடை அணிந்துள்ள இந்த சகோதரி நீதித்துறையில் முதல் தரத்தில் வெற்றிப்பெற்று தெலுங்கானா மாநில நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் அணிந்துள்ள ஹிஜாப் இவருடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருந்ததா ?
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தன்னுடைய வீட்டில் இருக்கும்போது என்ன மாதிரியான ஆடை அணிய வேண்டும் என்பதில் அவர்களின் விருப்பம் ஆகும்.
ஆண் வீட்டை விட்டு வெளியில் வந்து சமூகத்துடன் கலக்கும் போது அடையாளம் காண்பதற்காக அந்த ஆணின் முகம் வெளியில் தெரியவேண்டியது அவசியமான ஒன்றாகும்.
முகம் வெளியில் தெரிய வேண்டும் என்பது அவசியமான ஒன்று என்பதால் ஆண்கள் அனைவரும் முகம் தெரியும் விதமாகவே வெளியில் வருகிறார்கள்.
அதே அந்த ஆணின் வயிறு வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொடை வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
வயிறு, தொடை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அனைத்து மத ஆண்களும் அந்த பகுதிகளை மறைத்தே வெளியில் வருகிறார்கள்.
ஆண்கள் வயிறு, தொடை, தொப்புள் தெரியும் விதமாக வெளியில் வந்தால் அவர்களை சமூகம் பைத்தியக்காரர்கள் என்று அழைக்கும்.
ஒருவேளை ஆண்கள் அந்த பகுதிகளை வெளியில் தெரியும் விதமாக வந்தால் கூட ஆண்களுக்கு வன்புணர்வு போன்ற கொடுமைகள் நிகழாது.
அதேப்போல் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியில் வந்து சமூகத்துடன் கலக்கும் போது அவரை அடையாளம் காண்பதற்காக அவருடைய முகம் தெரியவேண்டியது  அவசியமான ஒன்று...
முகம் வெளியில் தெரிய வேண்டியது அவசியம் என்பதால் முகம் தெரியும் விதமாக வெளியில் வரலாம். இஸ்லாம் அதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை.
அதே பெண்ணின் வயிறு வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொடை வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை,
வயிறு, தொடை, தொப்புள் வெளியில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை எனும்போது அதை மூடி வருவது தானே சரியான ஒன்றாக இருக்க முடியும் ?
சரியான ஒன்றை முஸ்லிம் பெண்கள் செய்யும்போது அவர்களை ஊக்குவிக்க வேண்டிய சமூகம் இழிவாக பேசுகிறது.
ஆண்கள் அரைகுறையாக வந்தால் பைத்தியக்காரர்கள் எனும் சமூகம் பெண்கள் அரைகுறையாக வந்தால் சூப்பர் என்கிறது. மேலும் பெண்கள் பாலியல் ரீதியாக எண்ணற்ற துன்பங்களை சந்திப்பதையும் காண முடிகிறது.
அதுமட்டுமில்லாமல் பெண்கள் அரைகுறை ஆடை அணிந்தால் அது அவர்களுக்கான சுதந்திரம் என்று வக்காலத்து வாங்குபவர்கள் முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து வெளியில் வருவதும் அது அவர்களுக்கான சுதந்திரம் என்று வக்காலத்து வாங்க மறுப்பது ஏன் ?
முஸ்லிம் ஆண்களாகிய நாங்கள் முஸ்லிம் பெண்களை ஹிஜாப் அணிய வேண்டும் என்று அடிமைப்படுத்துவதாக சில பெண்ணிய அமைப்புகள் கூறுகிறார்கள்.
நாங்கள் எங்களுடைய குடும்ப பெண்களை ஹிஜாப் இல்லாமல் வெளியில் வாருங்கள் என்றாலும் அவர்கள் ஹிஜாப்புடன் தான் வெளியில் வருவார்களே தவிர ஹிஜாப்  இல்லாமல் வெளியில் வரமாட்டார்கள்.
ஏனென்றால் ஹிஜாப் அணியாத பெண்களை விட ஹிஜாப் அணிந்த பெண்கள் சமூகத்தில் கலக்கும்போது 100 சதவீதம் பாதுகாப்பாகவும், சௌகரியமாக கருதுகிறார்கள்.
அதனால் தான் சில ஐரோப்பிய நாடுகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டவுடன் முஸ்லிம் பெண்கள் பிரம்மாண்டமான தொடர் போராட்டங்களை நடத்தி தடையை ரத்து செய்ய வைத்தனர்.
முகம் தெரியும் அளவுக்கு வெளியில் வரும் ஒரு ஆணால் வெற்றியும், சாதனையும் படைக்க முடியும் என்றால் அதே முகம் தெரியும் அளவுக்கு வெளியில் வரும் ஒரு பெண்ணால் ஏன் வெற்றியும் சாதனையும் படைக்க முடியாது ?
வெற்றி, சாதனை என்பது அறிவு, திறமை, உழைப்பை வைத்து கிடைக்கக்கூடியது. இதற்கும் தொப்புளுக்கும் என்ன சம்பந்தம் ? பைத்தியக்காரத்தனமாக ஆடை அணியக்கூடியவர்கள் முஸ்லிம்களை பார்த்து பைத்தியக்காரர்கள் என்கிறார்கள்.
ஹிஜாப் எந்த வகையிலும் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கவில்லை. மாறாக பெண்களின் பாதுகாப்பு கவசமாகவும் இருக்கிறது.
நல்லவர்களுக்கு நல்லுபதேசம் பயனளிக்கும்.

No comments:

Post a Comment