Wednesday, 7 September 2016

ஹஜ் பயணிகளுக்கு முழு பாதுகாப்பு : சவுதி அரேபிய அரசு அறிவிப்பு!


ஹஜ் பயணத்தின் போது யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது கூட்ட நெறிசலில் சிக்கி 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதே போல் கிரேன் இயந்திரம் விழுந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியான சம்பவம் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக விமர்சனங்களுக்கு வழிகோலின.
இதனால் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது  யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தீவிரவாத தாக்குதல் அபாயங்களும் எழுந்துள்ளதால் மெக்கா நகர் முழுவதும் கண்காணிக்கும் வகையில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் சவுதி அரேபியா வந்துள்ள நிலையில் மேலும் பத்து லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment