Thursday, 22 September 2016

உள்ளாட்சித் தேர்தல் – பர்தா அணிந்து முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்க கூடுதல் பெண் ஊழியர்கள் நியமனம்! 


உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பணியாளர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
பர்தா அணியும் பெண்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் கூடுதலாக பெண் ஊழியர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
 எதாவது அரசியல் கட்சிக்கு ஆதரவாக நடப்பவராக அறியப்படும் அரசு ஊழியர்கள், முந்தைய தேர்தல்களில் விதிமீறலில் ஈடுபட்ட ஊழியர்கள், வேட்பாளர்களின் உறவினர்கள், ஆகியோரை தேர்தல் பணியில் ஈடுபத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிக வாக்காளர்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் அதிகம் இருக்கும் வாக்குச்சவாடிகளில் ஒன்று அல்லது 2 பெண் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மேலும் ஒரே துறையைச் சேர்ந்த ஊழியர்களை ஒரே வாக்குச் சாவடியில் நியமித்தால் அவர்கள் சமரசம் செய்து கொண்டு, சாதகமாக நடக்க வாய்ப்புள்ளதால் அவ்வாறு நடக்காதவாறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://liveday.in/general/tamilnadu-local-body-elections-preparations/

No comments:

Post a Comment