புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 300க்கும் அதிகமான விசைப்படகுகள் மூலம் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்படித்து வருகின்றனர். இந்த மீனவர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே மீன்கள் இறால், நண்டு உள்ளிட்டவை குறைவாகவே கிடைத்து வருகிறது. இதற்கு தகுந்த விலை கிடைக்கவில்லை. மேலும் அரசு தரும் மானிய டீசல் போதவில்லை.
மானிய டீசலை அதிகரித்தால் மீனவர்களுக்கு ஏற்படும் ஓரளவு நஷ்டத்தை தவிர்க்கலாம். மானிய டீசலை உயர்த்தி தர வேண்டும், இலங்கையில் உள்ள படகுகளை மீட்டு தர போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி மீனவர்கள் இன்று 6வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள், மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
320 விசைபடகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவ பிரதிநிதிகள் கூறுகையில், மீனவரத்து இல்லை. மானிய டீசல் போதவில்லை. பெரும்பாலான மீனவர்களின் படகுகள்் இலங்கையில் உள்ளது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு மீனவர்கள் நஷ்டத்தில் உள்ளோம். மானிய டீசலை உயர்த்த வேண்டும். படகுகளை மீட்டு தரவேண்டும். இல்லைஎன்றால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என்றனர்.
சேதுபாவாசத்திரம்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் பகுதியில் துறைமுகம் அமைக்க, மீனவர்கள் விட்டுக்கொடுத்த இடத்துக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். துறைமுக விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மல்லிப்பட்டிணம் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், இந்திய கடலோர கப்பல் படை முகாம் இயங்கி வரும் கட்டிடம் காலி செய்ய இருப்பதால் அந்த கட்டிடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும்.
விசைப்படகுக்கு மாதம் ஒன்றுக்கு விற்பனைவரி நீக்கம் செய்யப்பட்ட டீசல் 1,500 லிட்டரை 3,000 லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ம் தேதி முதல் மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்ட பகுதி நாட்டுப்படகு, பைபர் கிளாஸ் படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்று 6வது நாளாக நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தாஜூதீன் கூறும்போது, இதே நிலை நீடித்தால் வரும் 10ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் உள்ளாட்சி தேர்தலை மீனவர்கள் புறக்கணிப்போம் என்றார்
No comments:
Post a Comment