குருப் 4 விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் !
இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான ஆன்லைன் பதிவு இன்று (08-09-2016) நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது.
கடந்த 2 நாட்களாக ஒரே நேரத்தில் அதிகமானோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க முயன்றதால், டிஎன்பிஎஸ்சி இணையதளம் மெதுவாக இயங்கியது.
இதனால், விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் சிரமப்பட்டனர். இதற்காக காலநீட்டிப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனால், விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் சிரமப்பட்டனர். இதற்காக காலநீட்டிப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், காலநீட்டிப்பு செய்யவில்லை என்றும், இன்றே கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment