கோவை இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று வன்முறையில் ஈடுபட்ட 108 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் என்பவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் வன்முறையில் ஈடுபட்டு சில வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். மேலும் சில வழிபாட்டுத்தலங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கோவை கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 108 பேரை போலீஸார் இன்று கைது செய்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
கோவையில் தற்பொழுது இயல்பு நிலை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment