Tuesday, 26 July 2016

Google Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்! எதற்கு தெரியுமா?


கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப்படும் ஆப்ளிகேஷன்களின் அளவை குறைக்க கூகுள் புதிய வழிமுறையை (algorithm) கொண்டு வந்துள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் உள்ள பிளே ஸ்டோரில் பதிவேற்றப்படும் ஆப்ளிகேஷன்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு வரை 64 பில்லியன் ஆப்ளிகேஷன்கள் இதில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் பெரிய அளவிலான ஆப்ளிகேஷன்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதால், பதிவிறக்கம் செய்யப்படும் போது கடினமாக இருக்கும். இதனால் இந்த அளவை குறைக்கு முயற்சியில் கூகுள் களமிறங்கி உள்ளது.
இதற்காக ஒரு புதிய algorithm ஒன்றை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் ஆப்ளிகேஷன்களின் அளவை குறைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
bsdiff என பெயரிடப்பட்டுள்ள இந்த algorithm கொண்டு குறைந்த அளவில் ஆப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது, பதிவிறக்கம் செய்யும் போது பிளே ஸ்டோரில் உள்ள ஆப்ளிகேஷன்கள் பாதியாக குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தொழிநுட்பம் முழு ஆப்ளிகேஷனில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும், சிலவற்றை மட்டுமே அப்டேட் செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment