குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பும் உண்ணும் உணவு சிக்கன். சிக்கனை அதிகம் சாப்பிடுவதால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை பார்க்கலாம்.
கடைகளில் ‘லாலிப்பாப்பு’க்கு அடம் பிடிக்கும் குழந்தைகள் ஓட்டலிலும் ‘லாலிபாப்’ கேட்டு அடம் பிடிப்பதை பார்க்க முடியும்.
கோழி இறைச்சியை லாலிபாப் மிட்டாய் வடிவில் தயாரித்து வழங்குகிறார்கள். முள் இல்லாமல் சாப்பிட பஞ்சுபோல் இருக்கும் இந்த வெரைட்டிக்குத்தான் குழந்தைகள் அடம் பிடிக்கும்.
கோழி இறைச்சியை லாலிபாப் மிட்டாய் வடிவில் தயாரித்து வழங்குகிறார்கள். முள் இல்லாமல் சாப்பிட பஞ்சுபோல் இருக்கும் இந்த வெரைட்டிக்குத்தான் குழந்தைகள் அடம் பிடிக்கும்.
குழந்தைகள் மட்டுமல்ல எல்லா வயதினரையும் கவரும் வகையில் ஒரு சிக்கனை 20க்கும் மேற்பட்ட வகைகளாக ஓட்டல்களில் தயாரித்து விடுகிறார்கள்.
சிக்கன்65, சில்லிசிக்கன், கார்லிக்சிக்கன், பட்டர்சிக்கன், பெப்பர்சிக்கன், சிக்கன் மஞ்சூரியன், நாட்டிசிக்கன், சிக்கன் ரோல், சிக்கன் கறி, செட்டிநாடு சிக்கன், சிக்கன் கபாப்,கேரளசிக்கன் ரோஸ்ட், சிக்கன் தவா, சிக்கன் வறுவல், சிக்கன் பொரிப்பு, கறிவேப்பிலை சிக்கன், சிக்கன் பரத்தா, லெமன் பெப்பர் சிக்கன் , ஸ்காலியன் சிக்கன், தந்தூரிசிக்கன்.... இன்னும் பல!
அசைவ உணவு பிரியர்கள் ஓட்டல்களில் மெனு கார்டை பார்த்து ஆர்வத்துடன் வகை வகையாக ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடுவதுண்டு. மக்களின் சிக்கன் ஆர்வத்தை பார்த்து ‘கேஎப்சி’ போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் கால்பதித்து விட்டன. நம்ம ஊரு நாட்டுக்கோழியை அதற்குரிய மசாலாக்கள் போட்டு சமைத்தால் நாலு ஊருக்கு இறைச்சி வாசனை சும்மா தூக்கும்! அதேதான் ஆட்டிறைச்சியும்! ஆனால் இப்போது கொழுப்பு அதிகம் என்று அதை கைவிட்டுவிட்டோம்.
பிராய்லர் சிக்கன் அப்படி அல்ல. கடித்தால் எலும்புகளும் கீரைத்தண்டுகள் போல் இருக்கிறது. இறைச்சியும் பஞ்சு மிட்டாய் போல் தான் இருக்கிறது. அதனால் அதன் மீது மக்களுக்கு ஈர்ப்பு அதிகம். சுவையூட்டிகள் சேர்ந்து சுவையும் அதிகரிப்பதால் ‘சிக்கன்’ சுண்டி இழுக்கிறது.
குறைந்த முதலீடு, நல்ல வருமானம் என்பதால் பிராய்லர் வளர்ப்பும் அமோகமாகி வருகிறது. இந்தியாவில் சுமார்16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் தொழிலாக உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் கோழிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 60 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் டன் சிக்கன் சாப்பிடுவதாக புள்ளி விபரம் கூறுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இது குறைவு தான்.
ஆனால் சிக்கன் சாப்பிடுவதால் பல சிக்கல்கள் வருகிறது என்பது தான் அதிர்ச்சி அளிக்கிறது. பிராய்லர் வளர்ப்பில் ‘ஸ்டிராய்’ என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்கு கேடு விளைவிப்பவை.
ஆனால் சிக்கன் சாப்பிடுவதால் பல சிக்கல்கள் வருகிறது என்பது தான் அதிர்ச்சி அளிக்கிறது. பிராய்லர் வளர்ப்பில் ‘ஸ்டிராய்’ என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்கு கேடு விளைவிப்பவை.
கோழிகள் விரைவில் வளர வேண்டும் என்பதற்காக இந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சராசரியாக 28-ல் இருந்து 45 நாட்களுக்குள் பிராய்லர் கோழிகள் அசுரவளர்ச்சி அடைந்து இறைச்சிக்கு தயாராகிவிடுகிறது. அதற்கு மேல் கோழிகளை வளர்த்தால் நஷ்டம் தான் ஏற்படும் என்கிறார்கள். மருந்தால் மகத்தான வளர்ச்சி அடையும் இந்த கோழி இறைச்சியை சாப்பிடுவது உடல்பருமனை ஏற்படுத்துகிறது. உடலின் வழக்கமான இயக்கதன்மையை மாற்றுகிறது. இதனால் உடலில் பல கோளாறுகள் உருவாக காரணமாகிறது. முக்கியமாக பெண்குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைவதற்கும் காரணமாக இருக்கிறது.
வழக்கமாக கோழிகள் இறைச்சி பருவத்தை அடைய 3 முதல் 5 மாதம் ஆகும். ஆனால் விரைவான மகசூலுக்காக உணவு முறை, வேதிப்பொருள் ஊட்டல்போன்ற முறைகளை கையாள்கிறார்கள். கோழிப்பண்ணைகளின் வளர்ச்சியும் அவசியம். அதைவிட மக்கள் உடல் நலம் மிக முக்கியம்.
இதை கருத்தில் கொண்டு மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கோழி வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி ஆய்வு செய்து பிராய்லர் வளர்ப்பில் புதிய முறைகளை புகுத்தலாம். மக்கள் விரும்பி சாப்பிடும் உணவால் மக்களின் உடலுக்கு ஆபத்து அதிகரித்தால் மக்கள் திரும்பி பார்க்காமல் செல்லும் காலம் வந்துவிடும். எனவே மக்கள் மீது அக்கறையும், கோழி வளர்ப்பில் கவனமும் அவசியம்.
No comments:
Post a Comment