காஷ்மிரில் ராணுவத்தினரின் அடக்குமுறைகளை கண்டித்து சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சாரபில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின முன்பாக திரண்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் காஷ்மிர் மக்களை காப்பாற்றக்கோரி முழக்கமிட்டனர்.இந்த போராட்டதில் கட்சியின் பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி சிறப்புரையாற்றினார். இதில் கொங்கு மக்கள் பேரவை கட்சி தலைவர் தனியரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தலைவர்கள் சிறப்புரை ஆற்றிய பின்னர் தொண்டர்கள் ரெயில் நிலையத்தை நோக்கி விரைந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த போராட்டத்தால் எழும்பூரில் பரபரப்பு நிலவியது.
No comments:
Post a Comment