சவுதி:
வதந்திகளும்_முற்றுப்புள்ளி வைத்தது சவுதி: மதீனாவில் நடந்தது தற்கொலை படைதாக்குதல் தான் சவுதி வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது:
மெக்காவுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களின் இரண்டாவது புனித தலமான மதீனாவில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் பொருத்தி இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தி உள்ளான்.இதில் இரண்டு பாதுகாப்பு
அதிகாரிகள் உயிரிழந்தனர். நான்கு பேர் பாதுகாப்பு அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். Al-Ansar Hospital-யில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்களை மதீனா Prince Faisal bin Salman நேரத்தில் சந்தித்து
ஆறுதல் கூறினார்.
இந்த தாக்குதல் வயதான மற்றும் மாற்றுத் திறனாளிகள் வருகைதரும் வாகனங்கள் நிறுதி வைக்கும் பகுதியில் நடைபெற்றுள்ளது.இது சவுதி காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று மேலும் செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் இருந்த சிலிண்டர் பயங்கரமாக வெடித்து சிதறியது என்ற வதந்திகளும் சவுதி அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இதன் மூலம் இது வெடிகுண்டு தாக்குதல் என்பதை சவுதி உறுதி செய்துள்ளது.
இதேபோல் சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள ஷியா பிரிவினரின் மசூதி அருகே, தனது உடலில் பொருத்தி இருந்த வெடிகுண்டை தீவிரவாதி வெடிக்கச் செய்தான். இதில் அவனது உடல் சுக்கு நூறாக சிதறியது என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஜித்தா அமெரிக்கா துணை தூதரகத்தில் நேற்று அதிகாலை நடந்த தாக்குதலை சந்தேகப்படும் படி அங்கு வலம் வந்த நபரை போலீஸ் பிடித்து விசாரித்த வேளையில் உடலில் கட்டியிருந்த மனித வெடிகுண்டை வெடிக்க செய்தான் இதில் அவன் உடல் சிதறி பலியானன்.இதிலும்
இரண்டு அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவன் பெயர் Abdullah Khan. இவன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன்.இவன் கடந்த 12 வருடங்களாக சவுதியில் மனைவி மற்றும் பெற்றோர்களுடன் வசித்து வந்தான் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment