Saturday, 30 July 2016

சவுதி-குவைத்தில் வேலையிழந்து தவிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு உதவ ஏற்பாடு: சுஷ்மா


சவுதி மற்றும் குவைத்தில் வேலையிழந்து தவிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு உதவ ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சவுதி மற்றும் குவைத்தில் உள்ள பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய இந்திய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சம்பளமும் வழங்கப்படாததால் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
இதையடுத்து இந்திய தொழிலாளர்களுக்கு தூதரகம் மூலம் உதவுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் நமது சகோதர சகோதரிகள் ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர். இதனால் அவர்கள் கடும் துன்பங்களை சந்தித்து வருகிற்னர். குவைத்தில் உள்ள சூழ்நிலை சமாளிக்கக்கூடிய அளவிலேயே உள்ளது. சவுதியில் நிலைமை மோசமாக உள்ளது.
எனவே, வேலை இழந்து தவிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு உதவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் மூலம் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அங்குள்ள அதிகாரிகளுடன் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக மத்திய மந்திரி வி.கே.சிங்கும் சவுதி செல்ல உள்ளார். அங்குள்ள நிலைமையை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய தூதரகம் சார்பில் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்குவது தொடர்பான புகைப்படங்களும் டுவிட்டரில் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment