Thursday, 28 July 2016

சேக்தாவூத் மீது நடவடிக்கை எடுக்க கோரும் தமிழ்நாடு முஸ்லிம்லீக்….


சட்டமன்றதேர்தலில் சீட்டு,அரசாங்க வேலை, மருத்துவகல்லூரி சீட்டு வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றி இருப்பதாக தமிழ்மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் சேக் தாவூத் மீது தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அந்த கட்சியின் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது 6-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது கட்சயின் சார்பில் பார்ட்டுகளை தெரிவிப்பதாக கூறினார். உலமாக்களின் ஓய்வூதியத்தை 1000 ரூபாயில் இருந்த 1500 ஆக உயரத்தி வழங்கிய முதலமைச்சர் ஜெயல்லிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாக கூறினார். ரமலான் காலங்களில் 3000 பள்ளிவாசல்களுக்கு 4ஆயிரத்து 600 மெட்ரிக் டன் அரிசியை வழங்கும் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக அயராது பாடுபட இருப்பதாகவும் முஸ்தபா கூறினார். அதிமுகவின் ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரங்கள் மற்றும் தெருமுனை பிரசாரங்கள் மூலம் நாடு முழுவதும் சென்று பரப்புரை செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார.மேலும் கடந்த காலங்களில் அதிமுக அரசின் பெயரை பயன்படுத்தி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக் தாவூது மீது பலர் காவல்துறையில் புகார் அளித்து இருப்பதாகவும் அவர் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment