Saturday, 16 July 2016

துருக்கியில் தமிழக பள்ளி மாணவர்கள் உட்பட 200 இந்திய மாணவ,மாணவிகள் மற்றும் மற்றும் காரணமாக தங்கியுள்ள பலர் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தவிப்பு:

துருக்கி:

   துருக்கியில் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கான உலக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற 200 இந்திய மாணவ, மாணவிகள், சிக்கித் தவிக்கின்றனர்.
   துருக்கியில் ராணுவ புரட்சி காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால், போட்டி நடைபெறும் பகுதியில் இருந்து யாரும் வெளியேற வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. துருக்கியில் உள்ள ட்ராப்சோன் மாகாணத்தில் பள்ளிகளுக்கான உலக விளையாட்டுப் போட்டிகள் கடந்த 11 ஆம் தேதி தொடங்கின. தடகளம், நீச்சல், மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.
    இந்தப் போட்டியில் 20க்கும் அதிகமான தமிழர்கள் உட்பட 200 இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். துருக்கியில் தற்போது பதற்றமான சூழல் இருப்பதால், போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா அல்லது கைவிடப்படுமா என்பது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்தியர்கள் தவிப்பு: ஹெல்ப்லைன் அறிவிப்பு:
   துருக்கியில் இந்தியர்கள் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கா அங்காரா நகரில் +905303142203, இஸ்தான்புல் நகரில் +905305671095 ஆகிய ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுஷ்மா வேண்டுகோள்:
துருக்கியில் நிலைமை கட்டுக்குள் வரும் வரை இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழர்கள் தவிப்பு:
துருக்கியில் பள்ளி விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் அங்கு சிக்கிக் கொண்டுள்ளனர். அந்த வீரர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டிராப்சோன் பகுதியில் உள்ள விளையாட்டு கிராமத்தில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment