பெய்ஜிங்:
சீனாவின் வடக்குப் பகுதியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலியாகி உள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. 2.50 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். சீனாவின் வடபகுதியில் உள்ள ஹூபெய் மாகாணத்தில் கடந்த 18ம் தேதி முதல் இடைவிடாமல் கனமழை கொட்டியது.
இதனால், பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 10 நகரங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதில், 53 ஆயிரம் வீடுகள் முற்றிலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. 6.8 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2.50 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். இதுவரை கனமழைக்கு 200 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. 3.1 லட்சம் பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 7 லட்சம் ஹெக்டேர் பயிர் நாசமாகி உள்ளது. வெள்ளத்தை பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையே, வெள்ளத்தை சரிவர கையாளவில்லை என்று காரணம் கூறி, ஹூபெய் மாகாண அரசு, 4 உயரதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கடும் வெள்ளம், உணவுப்பொருட்கள் கிடைக்காத நிலை, குடிநீருக்கே சிக்கல் ஆகியவற்றால், மக்கள் அரசின் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து அளிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
No comments:
Post a Comment