Friday, 1 July 2016

20, 30, 40, 50, 60-களில் ஆண்கள் ஆய்வு செய்துக் கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்!


நமது உடல் எப்படி குழந்தையாக இருந்து இளம் பருவம் அடையும் வரை மெல்ல, மெல்ல, வளர்ந்து வலுவடைகிறதோ. அதே போல குறிப்பிட்ட வயதில் இருந்தும் மீண்டும் சுருங்க ஆரம்பிக்கிறது. இந்த சுழற்சி முறை காரணமாக தான் நமது உடல் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மேலும், ஒவ்வொரு பருவம், மற்றும் வயதை கடக்கும் போதும், நமது உடலின் குறிப்பிட்ட பாகங்களின் செயற்திறன் குறைய வாய்ப்புகள் உள்ளன.
எனவே, அவற்றில் என்ன பாதிப்பு உண்டாகியிருக்கலாம், அதை சரி செய்துக் கொள்ள என்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிந்துக் கொள்வது நல்லது.
இதில், ஆண்கள் குறிப்பிட்ட வயதை கடக்கும் போது சில முக்கியமான பரிசோதனைகள் செய்துக்கொள்ள வேண்டும்...


இருபது வயதில் ஆண்கள் ஆய்வு செய்துக் கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்:-
விரைச்சிரை பரீட்சை (Testicular self exam)தடுப்பூசி பூஸ்டர் (Vaccine Booster)பால்வினை நோய் தாக்க பரிசோதனை
முப்பது வயதில் ஆண்கள் ஆய்வு செய்துக் கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்:-
கொலஸ்ட்ரால்உடல் எடை (Body Mass Index - BMI)சரும புற்றுநோய் ஆய்வு
நாற்பது வயதில் ஆண்கள் ஆய்வு செய்துக் கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்:-
கண் பரிசோதனைஇரத்த அழுத்த பரிசோதனைஇரத்த சர்க்கரை / நீரிழிவு
ஐம்பது வயதில் ஆண்கள் ஆய்வு செய்துக் கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்:-
காலனோஸ்கோபி (பெருங்குடல் அகநோக்கல்)இருதய பரிசோதனைபுரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைநோய் தடுப்பு (ஹெபடைடிஸ் சி)
அறுபது வயதில் ஆண்கள் ஆய்வு செய்துக் கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்:-
கண் பார்வைஎலும்பு அடர்த்தி பரிசோதனைவயிற்று பெருந்தமனி குருதி நாள நெளிவு (abdominal aortic aneurysm)நோய் தடுப்பு (காய்ச்சல் மற்றும் குளிர் நடுக்கம்)
35 வயதுக்குக் மேல் பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை மார்பக புற்றுநோய் பரிசோதனையும். ஆண், பெண் இருவரும் வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனையும் செய்துக் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment