Friday, 17 June 2016

முஸ்லிம் ஊழியர்களுக்கு ரூ 3,200 ரமலான் போனஸ் : மம்தா பேனர்ஜி அறிவிப்பு....!!



முஸ்லிம் ஊழியர்களுக்கு ரூ 3,200 ரமலான் போனஸ் : மம்தா பேனர்ஜி அறிவிப்பு....!!
இந்துக்களின் பண்டிகையின் போது போனஸ் வழங்கும் அரசுகள் முஸ்லிம்களின் பண்டிகையின்போது போனஸ் வழங்காமல் இஸ்லாமியர்களை வஞ்சித்து வந்தன.
இஸ்லாமியர்களும் இந்நாட்டு மக்கள், இம்மண்ணின் மைந்தர்கள் என்பதை உணர்ந்த மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசு முஸ்லிம் ஊழியர்களுக்கு ரூ 3,200 ரமலான் போனஸாக வழங்கப்படுவதாக முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.
மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா இதுபற்றி கூறும் போது...
முஸ்லிம்களின் பண்டிகை கால போனஸாக அரசு 400 கோடியை ஒதுக்கியுள்ளது. பெருநாளுக்கு முன்பாகவே இந்த தொகை அனைவருக்கும் கொடுக்கப்பட்டு விடும்' என்கிறார்.
சிறுபான்மையினரையும், பெரும்பான்மையினரையும் ஒரே கண்கொண்டு பார்க்கும் அரசுதான் மதச்சார்பற்ற அரசாக இருக்க முடியும். இவரை பின்பற்றி மற்ற மாநில முதல்வர்களும் ரமலான் போனஸ் அறிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment