Monday, 16 May 2016

துபாயில் பணிபுரியும் வாகன ஓட்டுனர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி!


துபாய்:
Please  Share All.... Exclusive....
துபாய் வாகன ஓட்டுநர்கள்  கவனத்திற்கு: 600 Dirhams பிழை; ஒரு மாதம் வாகனம் பறிமுதல்; 6 black points :
   துபாயில் முக்கிய சாலைகளில் 20 அதிநவீன கண்காணிப்பு Camera-களை
சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் புதிதாக வைத்துள்ளனர். சாலை விதிகளை மீறும் நபர்களுக்கு
இதன் மூலம் 600 Dirhams பிழை,ஒரு மாதம் வாகனம் பறிமுதல் மற்றும்  6 black points வழங்கபடும் என்று
போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
  இதன்படி இந்த அதிநவீன கேமராக்கள்
ஓட்டுநர்களுக்கு கண்ணில் படாதபடி இரகசியமான இடங்களில் பொருத்தியுள்ளது துபாய் போலீஸ் அதிகாரிகள்.
  இதை பொருத்தி வெறும்  இரண்டு மணிநேரத்தில் மட்டும் 134 வாகனங்களை கண்டுபிடித்து பிழை விதித்துள்ளது துபாய் போலீஸ்.
  இந்த தகவலை துபாய் போலீஸ் அதிகார பூர்வமான இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.
  இந்த திட்டம் வரும் நாட்களில் துபாயின் அனைத்து இடங்களிலும்
நடைமுறை படுத்த உள்ளதாக  செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இதை தவிர இந்த கேமராக்கள்
எளிதில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி அமைக்க
முடியும் விதத்தில் எளிதாக
வடிவமைக்கப்பட்டுள்ளது.
நன்றி #Kuwait-தமிழ் பசங்க

No comments:

Post a Comment