Saturday, 14 May 2016

இலவச வாக்குறுதி.. திமுக, அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: நாளைக்குள் பதிலளிக்குமாறு உத்தரவு.


சென்னை: தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இலவசங்களுக்கான பணம் எங்கிருந்து வருகிறது என விளக்கம் கேட்டு திமுக, அதிமுக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் மாணவர்களின் கல்விக் கடன், விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இதேபோல அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கைப்பேசி உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த இலவச அறிவிப்புகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விளக்கம் கேட்டு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மேலும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் நாளைக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
tamil.oneindia.com

No comments:

Post a Comment