அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அளவுக்கு அதிகமாக பண வினியோகம் இருப்பதாகக் கூறி, அத்தொகுதியின் வாக்குப்பதிவை மே 23-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஒத்திவைத்திருந்தது.
இதனிடையே தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலையும் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. இந்த தொகுதியிலும் வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகார்களை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கைய எடுத்துள்ளது.
அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் வரும் 25ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள்.
No comments:
Post a Comment