கட்டார் நாட்டில் பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு எதிரான சட்டமொன்று நேற்று முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி சட்டத்தையும் மீறி, பொதுயிடங்களில் புகைபிடித்தால் 3000 கட்டார் ரியால்கள் வரை தண்டமாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டாரின் சட்டம் மற்றும் சட்டவாக்க விவகார சபைக்கும், புகையிலை உற்பத்தி கட்டுப்பாட்டு ஆணையகத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையையடுத்தே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
அதேவேளை தமது நிறுவனத்தில் பொதுமக்களுக்கு புகைபிடிக்க அனுமதி கொடுக்கும் ஊழியர்களுக்கும் அபராதம் விதிக்கபட உள்ளது.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
நன்றி : மடவள நியூஸ்
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
நன்றி : மடவள நியூஸ்
No comments:
Post a Comment