Monday, 4 April 2016

தமிழ்மாநில காங்கிரஸுன் புதிய சின்னம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ::


தமிழ்மாநில காங்கிரஸுன் புதிய சின்னம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் :: பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில பொதுச்செயலருமான S.V.திருஞானசம்பந்தம் பங்கேற்ற கூட்டத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட தலைவருமான ரெங்கராஜன் அறிவிப்பு.
தமாகாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ள தென்னந்தோப்பு சின்னம் குறித்து பேராவூரணி உட்பட தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளர்களிடையே அறிமுகம் செய்வதற்கான பிரசாரம் சனிக்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூரில் இந்தச் சின்னத்தை நிர்வாகிகளிடம் காண்பித்து அறிமுகம் செய்து வைத்த அக்கட்சியின் தெற்கு மாவட்டத்தலைவரும், பட்டுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான என்.ஆர்.ரெங்கராஜன் தெரிவித்தது:
ஒரு கட்சி வெற்றி பெறுவதற்கு சின்னம் முக்கியம். விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பது தென்னந்தோப்பு. அதனால், இச்சின்னம் கேட்டுப்பெறப்பட்டுள்ளது. கடந்த 1996-ல் நடைபெற்ற தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டுவெற்றி பெற்றோம். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் தமாகா இணைக்கப்பட்டதால் அச்சின்னம் தேர்தல் ஆணையத்திடம் திரும்ப
ஒப்படைக்கப்பட்டது. இப்போது, சைக்கிள் சின்னம் வட மாநிலத்தில் உள்ள கட்சிக்கு வழங்கப்பட்டதால் அதை மீண்டும் பெற முடியவில்லை. எனவே, என்ன சின்னம் பெறுவது என தொண்டர்களிடம் கருத்து கேட்டபோது, பெரும்பாலானோர்
தென்னந்தோப்பு சின்னத்தைக் குறிப்பிட்டனர். இதைத் தலைவர் ஜி.கே. வாசன் ஏற்று தென்னந்தோப்பு சின்னத்தைப் பெற்றார். இதையடுத்து, இச்சின்னத்தை சென்னையில் தலைவர் அறிமுகம் செய்தார். இதைத்தொடர்ந்து, இச்சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர, வட்டார, பேரூர், கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்யப்படவுள்ளது. மேலும், பொதுமக்களிடம் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டறிக்கைகள் வழங்குவது, தொண்டர்களின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டுவது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றார் ரெங்கராஜன்.
இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட மேலிடப் பார்வையாளர் டி.ஆர்.தர்மராஜ், பேராவூரணி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மாநிலப் பொதுச்செயலருமான எஸ்.வி.திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment