செங்கடலில் ஓர் சங்கமம்....!!
உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் சக்கரவர்த்தி மன்னர் சல்மான் எகிப்து நாட்டிற்கு பயணம் செய்துள்ளார்.
அவரை வரவேற்ற எகிப்து அதிபர் அப்துல் பத்தாஹ் மன்னர் சல்மான் அவர்களுக்கு தங்க மாலையை அணிவித்து கெளரவித்தார்.
இருநாட்டு தலைவர்களின் பேச்சு வார்த்தையில்...
சவூதி அரேபியா மற்றும் எகிப்து நாட்டிற்கும் இடையிலான செங்கடலை இணைக்கும் விதமாக பிரம்மாண்ட பாலம் அமைப்பதாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
செங்கடலை சங்கமிக்கும் இப்பாலம் சவூதி அரேபியா, எகிப்து, ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளை இணைக்கும் பாலமாக திகழும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment