ரியாத்: சவுதி அரேபிய நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு டிசிஎஸ் அனைத்து பெண்கள் தொழில்நுட்ப மையத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சவுதி நாட்டின் சிறப்புக்கு காரணமான தொழிலாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார். மேலும் பேசிய அவர் நீங்கள் அனைவரும் இந்தியாவிற்கு நிச்சயம் வர வேண்டும். நீங்கள் இந்தியாவிற்கு வரும் போது உங்களுக்கு உறுதியாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்றார். அங்கு குழுமியிருந்த பெண் மென் பொறியாளர்களை பார்த்து உலகிற்கு ஒரு வலுவான பதிலை அளிக்கவல்ல கூட்டத்தை காண முடிவதற்கு இங்கு நானே சாட்சி என்று குறிப்பிட்டார்
No comments:
Post a Comment