Sunday, 3 April 2016

இந்தியாவில் மருத்துவத்துறையில் முதலீட்டை அதிகரிக்க அரசு முக்கியத்துவம் : சவுதியில் மோடி பேச்சு.


ரியாத்: இந்தியாவில் மருத்துவத்துறையில் முதலீட்டை அதிகரிக்க தமது அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக சவுதியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரியாத் நகரில் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசிய மோடி, சவுதி அரேபியாவுடனான இந்தியாவின் நட்பு மிகவும் நெருக்கமானது என்றார். இந்தியாவில் 2 ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் சவுதியில் இந்திய தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் மோடி பாராட்டு தெரிவித்தார். மேலும் பேசிய அவர் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிச்சயம் நிறைவேறும் என்ற பிரதமர் மோடி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment