Monday, 4 April 2016

மூன்று முக்கிய குறிப்புகள்...! முத்தான நன்மைகள்!


ஆரோக்கிய வாழ்க்கைக்கு சில ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம்.
கீழே தண்ணீர், மாதுளை மற்றும் கருணைக்கிழங்கின் நன்மைகள் பற்றி சிறு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை அறிந்துகொண்டு பயன்பெறுங்கள்
கோடைகாலத்திற்கு தண்ணீர்
கோடைகாலங்களில் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகளே ஆவர்.
இந்த கோடைக்காலத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பல்வேறு பானங்கள் இருந்தாலும், தண்ணீரை எப்போதும் நம்முடன் வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும்.
கடும் வெயிலால், உடலில் நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படும். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
வெயிலில் இருந்து தப்ப நினைப்பவர்கள், "ஏசி' யில் இருக்க விரும்புகின்றனர். இதனால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிக நேரம் "ஏசி' யில் இருக்க கூடாது.
குளிர்ச்சியான தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை மிதமான குளிர்ச்சியில் குடிக்கலாம்.
சுத்தமான தண்ணீர், இளநீர், மிதமான உப்பு சேர்த்த மோர் குடிக்கலாம். பழங்கள் சாப்பிடலாம்.
காபி, டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
சத்துகள் மற்றும் ஆக்சிஜனை செல்களுக்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது தண்ணீர். சுவாசத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தருகிறது.
உடல் உறுப்புகள் பாதுகாக்கப்படுகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. உடலுக்கு ஆற்றலை தருகிறது. எனவே, வெயில் காலத்தில் தண்ணீர் அதிகளவு குடிக்க வேண்டும்.
மாதுளை
மாதுளம்பழச் சாறையும், அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால், சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும்.
இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும், வைரஸ் கிருமிகளை துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால், நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிக்கிறது.
இதில், இனிப்பு பழத்தைச் சாப்பிட்டால் இதயத்துக்கு, மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது. இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு பழத்தை சாப்பிட்டால், வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது.
கருணைக்கிழங்கு
சாதாரணமாக சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும்.
அதனால் இக்கிழங்கை நன்றாக வேக வைத்து, பின்பு தோலை உரித்து, புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்கும்.
அரிப்பு இருக்காது. சிலர் அரிசி கழுவிய நீரில், காரும் கருணையை வேக வைப்பதும் உண்டு.
இதனால் காரல், நமைச்சல் மட்டுப்படும். ஜீரண மண்டல உறுப்புகளில், சிறப்பு வேலை செய்ய வல்லது.
பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நோய்களில், வெள்ளைப்பாடு என்ற நோய்க்கு, கைகண்ட மருந்தாக உதவுகிறது. உடல் வலி இருந்தால் கூட, போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது.

No comments:

Post a Comment