அட்டையில் பெயர், வயது, முகவரி போன்றவை குளறுபடியுடன் அச்சடித்து வழங்கப்பட்டிருப்பதாக பலர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், வேலூர் அருகே வாக்காளர் புகைப்படமே இல்லாமல் வாக்காளர் அடையாள அட்டை வினியோகம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் அடுத்த அணைக்கட்டை சேர்ந்த செல்வகுமார் என்பவரது மனைவி கீதாலட்சுமி(21). இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வாக்காளர் அட்டை வழங்கப்பட்டது. அதில் பெயர், முகவரி சரியாக இருந்தும் வாக்காளர் புகைப்படம் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அணைக்கட்டு பிடிஓ அலுவலகத்தில் முறையிட்டார்.
அப்போது, ‘உங்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை தருகிறோம், புகைப்படம் கொடுங்கள்’ என கேட்டுள்ளனர். அதன்படி, புகைப்படத்துடன் வண்ண வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் கீதாலட்சுமிக்கு வண்ண வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதிலும் வாக்காளர் புகைப்படம் இல்லை. எனவே, அவர் மீண்டும் பிடிஓ அலுவலகத்தில் சென்று முறையிட்டார். ஆனால், அதிகாரிகள் சரிவர பதிலளிக்கவில்லை என தெரிகிறது. புகைப்படம் இல்லாததால் அவர் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
No comments:
Post a Comment