Friday, 1 April 2016

தம்மாம் அருகே உள்ள ஜிபைல் நகரில் மனிதாபிமானத்திர்பு மணிமகுடம் சூட்டிய நிகழ்வு மரணத்தின் வாசல்வரை சென்றவர் இஸ்லாம் வலியுறுத்தும் மன்னிப்பினால் மீண்டு வந்தார் !


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற ஒரு கொலையில் தொடர்ப்புடையவர் சனீபர் பின் ஹம்து
இவரின் மீதான கொலை குற்றம் உறுதி செய்ய பட்டு அவருக்கு பொது இடத்தில் வைத்து மரணதண்டனை நிறைவேற்ற படுவதர்காக இன்று அவர் ஜீபைல் நகரில் பொது .இடத்திற்கு அழைத்து வரபட்டார்
காவல் துறையின் வாகனங்கள் வந்து நின்றது குற்றவாளி கொண்டு நிறுத்த பட்டார் மரணதண்டனையை நிறைவேற்ற குடியவர் தனது வேலையை செய்வதற்கான தயரிப்புகளில் இருந்தார்
பொது மக்கள் இந்த காட்சியை காண்பதர்காக குழுமியிருந்தனர்
இன்னும் சில நொடிகளில் சனீபர் என்ற குற்றவாளியின் உயிர் பிரிந்திவிடும் அவர் மரண தண்டனையின் மூலம் இறைவனடி சேர்ந்துவிடுவார் என்ற நிலையில் அவரது குடும்பம் நடுக்கத்தோடு நின்று கொண்டிருந்து நிலையில்
குற்றவாளியின் தலையை நோக்கி வாள் நீழ்வதர்கு சில நொடிகளுக்கு முன்பு ஒருவர் அவசரமாக வாகனத்தில் வந்து இறங்குகிறார் சனீபர் அவர்களின் மரண தண்டனையை நிறுத்திவிடுங்கள் இறைவனுக்காக நாங்கள் அவரை மன்னித்து விடுகிறோம் என்று காவலர்களிடம் தெரிவிக்கிறார்
ஆம் கொலை செய்ய பட்டவரின் குடும்பம் இறைவனின் பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்து குற்றவாளியை மன்னித்துவிடுவதாக இறுதி கட்டத்தில் அறிவிக்கின்றனர்
இதனை தொடர்ந்து மரணமேடை வரை சென்ற சனீபர் இறையருளால் இறுதி நிமிடத்தில் மரணத்தில் இருந்து மீண்டு வந்தார்
தம்மாம் அருகே உள்ள ஜிபைல் நகரில் இன்று நடை பெற்ற இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை உருவாக்கியது

No comments:

Post a Comment