Wednesday, 20 April 2016

சவுதியில் சிக்கித் தவிக்கும் 62 மீனவர்கள்: வெளியுறவுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.


சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் 62 மீனவர்களையும் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த வேண்டுமென வெளியுறவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 
தமிழக மீனவர்கள் 62 பேர் சவுதி அரேபியாவில் உள்ள யூசுப் கலீல் இப்ராகிம் அல் அமரி என்பவரது விசைப்படகுகளில் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நீண்ட காலமாக ஊதியம் அளிக்கவில்லை என்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
மேலும் இவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.  எனவே இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க  மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர். 
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய  நீதிபதிகள் செல்வம் மற்றும் கோகுல்தாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு  அனைத்து மீனவர்களையும் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த வெளியுறவு துறை மற்றும் அயல் நாட்டு வாழ் இந்தியர்கள் நலத்துறைக்கு, உத்தரவிட்டது.

No comments:

Post a Comment