Tuesday, 1 March 2016

நமது மாவட்டம் முழுவதும் 19,170 வாக்காளர்களை இறுதி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ::


நமது மாவட்டம் முழுவதும் 19,170 வாக்காளர்களை இறுதி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு :: இரட்டிப்பு பதிவு, இறந்தவர்களின் பெயர்களே நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் விளக்கம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்த இறந்தவர்கள் பெயர், இரட்டிப்பு பெயர்கள் என 19,170 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன்.
மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் பின்னர் தெரிவித்தது:
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஜன. 20-ம் தேதி நிலவரப்படி ஆண் வாக்காளர்கள் 9,32,791-ம் பெண் வாக்காளர்கள் 9,56,339-ம், இதரர் 39-ம் என மொத்தம் 18,89,169 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் இறந்த வாக்காளர்களின் பெயர், இரு இடங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர் என மொத்தம் 19,170 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நீக்கம் செய்யப்பட்ட பட்டியல் மாவட்ட ஆட்சியரக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பட்டியல் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக 333 பேர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கள விசாரணை நடைபெறுகிறது. மேலும், ஆட்சேபனை உள்ளவர்கள் படிவம் 6 அல்லது 8-ல் நிறைவு செய்து அளிக்கலாம். இறந்த வாக்காளர்கள் குறித்து படிவம் 7 கொடுக்கலாம் என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment