Monday, 22 February 2016

5G நெட்வொர்க்கை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது நோக்கியா; முதலீடுகளை அதிகரிக்கவும் திட்டம்


பார்சிலோனா, 
4G-ஐ விட பல மடங்கு அதிக வேகம் கொண்ட 5G தொழில்நுட்பத்தை 2018-க்குள் கொண்டு வர உலகம் முழுவதும் பல முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.  இதற்கு பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் வர்த்தக ரீதியாக இந்த தொழில்நுட்பத்தை வழங்க பல ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று முதல் பார்சிலோனாவில் துவங்கும் உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G தொழில்நுட்பத்தை விரைவில் கொண்டு வர முடியும் என நிரூபித்துக் காட்டவுள்ளதாக லண்டனின் சர்ரே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
நோக்கியா நெட்வோர்க்ஸ் ஏற்கனவே IoT-ready radio மற்றும் core networks தொழில்நுட்ப சேவைகளை இன்றைய கருவிகளுக்கு ஏற்றவாறு வழங்கி வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டிகளில் சிக்கலான IoT applications, செக்யூரிட்டி கணட்ரோல், மொபைல் கார்டு சொல்யூஷன்ஸ்-களை வழங்கி வருவதில் முன்னிலையில் உள்ளது. 
4G வேகத்தினை காட்டிலும் 1000 மடங்கு வேகமாக செல்லும் அலைகற்றையை உள்வாங்கும் ரேடியோ ரிசீவரை நோக்கியா நெட்வொர்க்ஸ் வடிவமைத்துள்ளது. இந்த கருவி மில்லிமீட்டர் மற்றும் சென்டிமீட்டர் அலைவரிசையை (single-digit millisecond latency) கையாளும் திறன் கொண்டது. 28 ஜிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த தொழில்நுட்பம் நொடிக்கு 1 ஜிகாபிட்ஸ் வேகத்தில் தகவல்களை கடத்தும் திறன் கொண்டது. இந்த 5G தொழில்நுட்பத்தை நேரடியாக ஆய்வாளர்கள் முன்னிலையில் ஏற்கனவே சென்ற ஆண்டில் நடந்த மாநாட்டில் செய்து காட்டியிருந்தது நோக்கியா. 
தற்போது வயர்லெஸ் நெட்வொர்க்கிங், நெட்வொர்க் பிளானிங் ஆகியவற்றில் நோக்கியா அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், 5G இண்டர்நெட் நெட்வொர்க் சேவையை கொண்டு வர தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பராமரிப்பு வசதிகள், மென்பொருள் சேவைகளை வழங்குவதில் இந்த ஆண்டு அதிக அளவில் முதலீடுகளை செய்ய உள்ளதாக நோக்கியாவின் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் சூரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment