Wednesday, 24 February 2016

நேபாளத்தில் காணாமல் போன விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிப்பு : பயணம் செய்த 23 பேர் பலி.


காத்மாண்டு : நேபாளத்தில் 23 பேருடன் சென்ற சிறிய ரக விமான விபத்துக்குள்ளானது. விமானத்தில் சென்ற 23 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  தாரா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 20 பயணிகள் மற்றும் 3 விமானிகளுடன் நேபாளத்தில் உள்ள பொஹாராவில் இருந்து ஜாம்சன் என்ற இடத்தை நோக்கி இன்று புறப்பட்டு சென்றது.
அந்த விமானம் சிறுது நேரத்திலேயே  விமான நிலையம் உடனான தொடர்பை இழந்தது. விமானம் புறப்பட்ட காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் 3 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது அந்த விமானம் வெடித்து சிதறியதாகவும், அதில் பயணம் செய்த 23 பேரும் உயிரிழந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேபாள விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment