Thursday, 25 February 2016

அமீரக அமைச்சரவையில் 22 வயதேயான இளம் பெண் அமைச்சர்

துபாய் பிப்ரவரி 25 (2016)

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அமீரக மந்திரி சபை கூட்டத்தில் 8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதில் 22 வயதேயான Shamma Al Mazrui இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இவர் 2014 - ல் பட்ட படிப்பை NYUAD கல்லூரியில் முடித்தார். படித்து முடித்த 2 வருடத்திலேயே அமீரக மந்திரி சபையில் முக்கிய இடம் பெற்றது,மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பல்வேறு தரப்பு மக்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
அபுதாபியில் பிறந்து வளர்ந்து பொது சமூக சேவையில் அக்கறையுள்ள Shamma Al Mazrui மென் மேலும் வெற்றி பெற நம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment