Wednesday, 20 January 2016

இன்ஷா அல்லாஹ் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியின் விபரங்கள்...!!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையின் சார்பாக திருச்சியில் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகள் சரியாக மாலை 4:00 மணிக்கு ஆரம்பம் ஆகும் இன்ஷா அல்லாஹ்..
தலைமை உரை...!!
நிகழ்ச்சியின் முதலில் தலைமை உரை
சகோதரர் M.முஹம்மது யூசுஃப் அவர்கள் (பொதுச்செயலாளர்)
ஷிர்க் விழிப்புணர்வு நாடகம்...!!
சிறுவர் சிறுமியர் பங்கேற்கும் ஷிர்க் விழிப்புணர்வு நாடகம் நடைபெறும்.
விவாத மேடை...!!!
தலைப்பு : இணை வைப்பு பெருக பெரிதும் காரணம் ஆலிம்களின் சுயநலமா? அல்லது மக்களின் அலட்சியமா? என்ற தலைப்பில் விவாதமேடை நடைபெரும் இன்ஷா அல்லாஹ்
நடுவர் - M.I.சுலைமான் (மாநில துணைத்தலைவர்)
பங்கேற்போர் :
R.ரஹ்மத்துல்லாஹ், R.அப்துல் கரீம்
இவர்கள் ஒரு குழுவாகவும்,
K.S.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி, S.ஜமால் உஸ்மானி
இவர்கள் ஒரு குழுவாகவும்
விவாத மேடை நடைபெரும் இன்ஷா அல்லாஹ்...
மந்திர மேடை...!!!
சூனியம் ஒரு பித்தலாட்டமே என்பதை விளக்கும் மேஜிக் ஷோ நிகழ்ச்சி.
மாநில நிர்வாகிகளின் சிறப்புரை நிகழ்ச்சி...!!!
உரை : சகோ.: M.சம்சுல் லுஹா ரஹ்மானி அவர்கள் (மேலான்மை குழு தலைவர்)
தலைப்பு - தடைகளைத் தகர்த்த தவ்ஹீத் புரட்சி.!
உரை : சகோ : P.M.அல்தாஃபி அவர்கள் (மாநில தலைவர்)
தலைப்பு - இணை வைப்பை வேரறுக்கும் இஸ்லாம்.!
உரை : சகோ : P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்
தலைப்பு - நல்லறங்கள் ஊற்றெடுக்கும் உன்னதத் தவ்ஹீத்.!
மாநாட்டின் தீர்மாணங்கள்...!!!
தீர்மாணங்கள் வாசிப்பவர் சகோ :
M.தவ்பீஃக் அவர்கள் (மாநில துணைப்பொதுச்செயலாளர்.
நன்றியுரை..!
சகோ: M.S.சுலைமான் அவர்கள் (மாநில செயலாளர்)
இணை வைப்பின் வகைகளை விளக்கும் கண்காட்சி அரங்குகள் காலையில் 10:00 மணி யிலிருந்து தொடங்கும் இன்ஷா அல்லாஹ் அனைத்து ஏகத்துவ கொள்கை சொந்தங்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தோடு இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இணைவைப்பு நிரந்தர நரகமே என்றும் இறைவனுக்கு இணையில்லா வாழ்க்கை சொர்க்கமே என்பதை விளங்கி அதன்படி நடந்து மறுமையில் வெற்றியை பெற உங்களை வருக வருக என அன்போடு அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

No comments:

Post a Comment